Saturday, October 3, 2020

3. தாரணை ~ தியானம்


ஓரு நாள் தபஸ்யோகியிடம் “கான்ஸ்ட்ரெண்டேஷனுக்கும் (தாரணை) மெடிட்டேஷனுக்கும் (தியானம்) இடையே என்ன வேறுபாடு” என்று கேட்டேன்.  இது தியானப் பயிற்சி பெறுவதற்கு முன்.

“இடமே வேற; டெக்னிக்கே வேற” என்று மட்டும் சொன்னார்.  

(பிறகு, ஸ்வாமி விவேகாநந்தரின் “Raja Yoga” புத்தகத்தில் கண்டது:

Continued concentration is meditation)

தியானம் (meditation) பயிற்சி:

சாந்தி யோகம் பெற்றவர்கள் சில வாரங்களில் தியானப் பயிற்சிக்குத் தயார்.

மீண்டும் சி. கே. எஸ் தியானத்தில் உட்கார்ந்து, தியானம் செய்தபடியே

நம்மிடம் வந்து மூலாதாரத்திலிருந்து ஸகஸ்ராரத்திற்கு (தலை உச்சிக்கு)

சக்தியை எழுப்பிவிடுவார்.  தலையைச் சுற்றிஅவர் விரல்கள் செல்லும்.

அதன் பிறகு தியானம் செய்யும்போது நேரடியாக ஸஹஸ்ராரத்திற்குச் சென்று,

தியானிக்க வேண்டும்.

இந்த தியானமுறையைப்  பல வாரங்கள் பழகி வந்தேன்.  தினம் மாலையில்

நடந்து சென்று மற்றவர்களுடன் சேர்ந்து  தியானம் செய்து வந்தேன். 


பல மாதங்கள் இது தொடர்ந்தது.  சுமார் 20 பேர் சேர்ந்து தியானம் செய்வோம்.

ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டது கிடையாது.  பயிற்சி/தியானம் 

செய்ய வருவோர் அநேகமாக 30 வயதுக்குள்தான் இருக்கும்.  ஓரிரண்டு பேர்கள் 50 வயதினராக இருக்கலாம்.    அங்கு பயிற்சி/தீக்ஷை பெற்றவர்களில் அந்நாளில் சற்றுப் பிரபலமாக இருந்த எழுத்தாளர் "ஆர்வி" - கலைமகளில் தொடர் கதை எழுதியிருக்கிறார்.  அவர் ஒரு முறை வந்த போது பார்த்திருக்கிறேன்.


தபிஸ்யோகி வேதாந்த தத்துவங்கள் பற்றிப் பேசியதாக நினைவில்லை. அவ்வப்போது அவர் உதிர்த்த சில சிறப்பு மொழிகள்:

1.  இரவு படுக்குமுன் சாந்தி யோகம் செய்துதான் படுக்கவேண்டும். (அதாவது "மூலாதாரத்தில்" மனத்தைக் குவித்திருக்க வேண்டும்).

2.  வாரம் ஒரு நாள் சாந்தி யோகம் செய்யவேண்டும்.

3.  உடல் நலமில்லாத சமயம், காய்சசல் இருந்தால், தியானம் செய்யக்கூடாது கூடாது.

4.  நாட்டுப்புறங்களில் நீச்சல் கற்பிக்கப்படும் முறை பற்றி பல முறை சொல்லியிருக்கிறார்.  அதாவது நீச்சல் கற்றுக்கொள்ள வந்தவரை தண்ணீரில் தள்ளி விடுவார்கள்.  அது போல் ராஜ யோகமும் நேரடியாகக் குதித்து விடவேண்டும்  என்பது மறைமுகம்!

5.  ஒளவையாரின் விநாயகர் அகவல் ராஜயோகப் பயிற்சி மூலம் குண்டலினி சக்தியை எழுப்புவது பற்றியே என்பார்.


பிறகு அலுவலில் அவrகோவைக்கு மாற்றப்பட்டார்.  அதன் பின் மாதம் ஒரு முறை சென்னை வருவார்.  அச்சமயம் இராய்ப்பேட்டை வூட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்குவார்.  அங்கு போய் அவருடன் பல சிஷ்யரும் சேர்ந்து தியானம் செய்வோம்.

ராஜ யோகம்


தபஸ்யோகி சி. கே. சிவராமகிருஷ்ணன் A.B.T.  Parcel கம்பெனியில் முழுநேர வேலை பார்த்து வந்தார்.

அவர் சொல்லிக் கொடுத்தது ராஜயோகம் என்று சொல்வார்.  

சிலநேரம் பொது விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்து விட்டு “போட்டு றுவமா?” என்பார்.  அதாவது தபஸ்யோகம் (தியானம்) தொடங்கலாமா? என்று பொருள்.  ஏற்கெனவே தீக்ஷை பெற்றவர்கள் சேர்ந்து  கீழ்க்கண்ட  உறுதிப்பாட்டைச் (resolution/motto/vow)  சொல்வார்கள் (ஆங்கிலத்தில்தான்):

“With the help of Tapas Yoga, consisting of *concentration, meditation and contemplation*, the evolving self in me is tuning my mind into one of positive thinking followed by positive action in all aspects. My Self is bound by Tapas Yoga towards positive progressive evolution and it shall be utilized for the welfare and the happiness of the Self in me and in others.  All glories to Tapas Yoga movement”

உறுதி கூறி முடிந்தவுடன், விநாயகர் அகவல் அல்லது ஷெனாய் இசை போடுவார்.  எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவோம்.

புதிதாக வந்தவருக்கு அவர் தீக்ஷை கொடுக்கும் முறை:  சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு, தியானம் செய்தபடியே நம்மிடம் வந்து மூலாதாரத்தில் தொட்டுக் குண்டலினி சக்தியை எழுப்பி ஆக்ஞை சக்கரத்திற்குக் கொண்டு வருவார்.   மந்திரம் எதுவும் கிடையாது.  தீக்ஷை பெற்றபின் அமைதியுடன் ஆக்ஞைச் சக்கரத்தில் மனத்தை ஒருமைப் படுத்தவேண்டும்.  

ஒருவாரம் சென்றபின், சாந்தி செய்துகொள்ள வேண்டும். அதாவது, மூலாதாரத்திலிருந்து ஆக்ஞைக்குக் குண்டலினியை எழுப்பியபொழுது, அவருடைய சக்தியைக் கடன் கொடுத்தாரல்லவா?  இந்த ஒருவாரத்தில், நம்முடைய குண்டலினி மேலே கிளம்பி வரத்தொடங்கி இருக்கவேண்டும்

ஆகவே, தபஸ்யோகி, அவர் எழுப்பிய சக்தியை மீண்டும் ஆக்ஞையிலிருந்து மூலாதாரத்திற்கு இறக்குவார்.  இதை மிகவும் வற்புறுத்துவார்.  சிலர் தீக்ஷை பெற்ற பின் வராமலே இருந்துவிடுவார்கள்.  அவர்களின் நண்பர் மூலம் அவர்களை வந்து சாந்தி பெற்றுப் போகக் கட்டாயப் படுத்துவார்.

பல விஷயங்களுக்கு நடுவே அங்கங்கே ஆன்மிகப் பயிற்சி பற்றிய சில விஷயங்களைப் பேசுவார்.

இந்தப் பயிற்சியை “Concentration” என்று சொல்வார்.  இதைச் சில வாரங்கள் பழகி விட்டுப் பிறகு “Meditation” செல்வோம்.

******************************************************************


1: ரிஷி மூலம்!


இது நான் செய்த, செய்து  கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணங்களில்

ஆன்மீகம் தொடர்பான பயணங்களைப் பற்றிய கட்டுரைத் தொடர்.


எழுதத் தொடங்கு முன் பல பாடல் வரிகள் மனத் திரையில் ஓடின.  அவற்றில்

முதலாவது ஆத்ம சக்தி என்ற சொல்லைக் கொண்ட கவி வரிகள்.  முதல் சில வரிகளுடன், முழுவதும் கேட்க சுட்டியும் கொடுத்திருக்கிறேன்:


சா ந்தி நிலவ வேண்டும்- ஆத்ம

சக்தி ஓங்க வேண்டும் உலகிலே

காந்தி மகான் கட்டளை அதுவே

-- இராகம்: திலங்க்  இயற்றியவர்: சேதுமாதவ ராவ்

https://youtu.be/sbYlstnjy2M

இப்பாடல் மகாத்மா காந்தி மறைவுக்குப் பின் அஞ்சலி செய்முகமாகப் பாடிய பாட்டு.  அந்நாட்களில் மிகப் பிரபலம்.

ஆத்ம சக்தி என்றால் என்ன?  இந்தக் கேள்வி அந்த நாட்களில் தோன்றவில்லை!  இப்பொழுது தோன்றுகிறது - ஆனால் சரியான பதில் சொல்ல முடியாது.  இன்னும் அதை அடையவோ, உணரவோ இல்லை என்பது தான் காரணம்!

ஆன்மீகப் பயணம் என்பது ஆன்மீகம் பற்றித் தேடிச் செய்த, செய்யும் பயணமா?

அல்லது ஆன்மீக வழியில் செய்த, செய்யும் பயணமா? என்ற கேள்விகள் வருகின்றன.

ஆன்மீகம் பற்றிய தெளிந்த அறிவு இல்லாமல் ஆன்மீக வழியில் வாழ்க்கைப் பயணம் செலுத்த முடியாது.  அதே நேரம், தெளிந்த அறிவு வரும் வரை ஒத்தி வைப்பது சரியில்லை.  ஆகவே என் பயணங்கள் தேடலும், தேடிய வரை வாழ்க்கையில் பின்பற்ற முயலுவதுமாக அமைந்தன!


எங்கு, எப்படி என் தேடல் தொடங்கியது?

இதைத் திட்ட வட்டமாகச் சொல்ல முடியவில்லை. 

ஆத்ம சக்தி பற்றி முதல் முதல் கேட்டது 1971-ம் ஆண்டு.  சென்னை இராயப்பேட்டையில் திரு. வி.க சாலையில் (அந்நாளில் இராயப்பேட்டை ஹை ரோடு) ஒரு மாலை நானும் வேதாவும் வெளியே சென்று விட்டுத் திரும்பி வந்து

கொண்டிருக்கிறோம்.  கிழக்குப் பக்க நடைபாதையில், வெங்கடாசலம் தெரு அருகே இருக்கிறோம்.  அச்சமயம் எதிர் வரிசையில், கிழக்குப் பார்த்த ஒரு கட்டடத்தில் பெரிய எழுத்துக்களில் “தபஸ் யோகி சி. கே. சிவராமகிருஷ்ணன்: தியானப் பயிற்சி” என்று பொருள் தரும் வகையில் ஆங்கிலத்தில் இருப்பது வேதாவின் கண்களில் படுகின்றது.  அதை என் கவனத்திற்குக் கொண்டு வருகிறாள்.

மறு நாள் அங்கு சென்று விசாரிக்கிறேன்.  இரண்டு மாடி தாண்டி, மொட்டை மாடியில் சிலர் இருந்தார்கள்.  தபஸ் யோகி மூலக் கடுப்பு காரணமாக அறுவை சிகிச்சை முடிந்து, ஓய்வில் இருப்பதால் இன்னும் ஒரு வாரம் செல்லும் என்று கூறினர்.

ஒரு வாரம் பொறுத்து மீண்டும் சென்றேன்.  தபஸ்யோகி இருந்தார்.  ஆனால், அப்பொழுதுதான் சிகிச்சையிலிருந்து மீண்டிருப்பதால், சில காலம் தபஸ் (தியானம்) செய்யாததால் தீக்ஷை அளிக்கும் சக்தி முழுதும் வரவில்லை என்றார்.  அன்றேயோ (என் வற்புறுத்தலினால்), பின் ஒரு நாளோ தீக்ஷை அளித்தார்.

அந்த தீக்ஷை பற்றிய சுருக்கமான விவரங்களையும் அதிலிருந்து அடுத்த பயணம் தொடர்ந்த  விவரங்களையும் அடுத்த பகுதியில் சொல்ல  இருக்கிறேன்.

ti Nilava Vendum சாந்தி நிலவ வேண்டும்


3. தாரணை ~ தியானம்

ஓரு நாள் தபஸ்யோகியிடம் “கான்ஸ்ட்ரெண்டேஷனுக்கும் (தாரணை) மெடிட்டேஷனுக்கும் (தியானம்) இடையே என்ன வேறுபாடு” என்று கேட்டேன்.  இது தியானப் பயிற்ச...